வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 மீன்களை கட்டாயம் சாப்பிடுங்க
இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மாரடைப்பை தடுக்கும் மீன்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தாக்குகின்றது.
பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கொழுப்புச்சத்து ஆகும். மீன்கள் ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும், சில மீன்கள் அதிகளவில் கொழுப்புச் சத்து கொண்டுள்ளது.
இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து மீன் வகைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மீன்கள்
சூரை மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள நிலையில், இவை ரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கின்றது.
இதே போன்று கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. உலகளவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த மீனை சாப்பிட்டால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்.
இறையன் மீனான டிரவுட் மீன், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், இதய ஆரோக்கியதை காக்கவும் செய்கின்றது.
வெங்கணை மீனில் E.P.A மற்றும் D.H.A எனும் இரண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இதில் வைட்டமின் டி சத்தும் அதிகமாகவே உள்ளது.
மத்தி மீனில் ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, செலினியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளதால், இதய ஆரோக்கத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த இது உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |