ஜனநாயகன் முதல் நாள் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா?
முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனநாயகன் திரைப்படம்
நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மேலும், அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை கோடி வசூல்?
வர்த்தக கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜனநாயகன் திரைப்படம் இந்தியாவில் மொத்தமாக ரூ.48.27 கோடியும், நிகரமாக ரூ.41 கோடியும் வசூலித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ.78.27 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தி மொழியில் ரூ.1.75 கோடியும், தெலுங்கில் ரூ.2.75 கோடியும் முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் ஜனநாயகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது