இந்தியா நாளை கொண்டாடவிருப்பது 77 அல்லது 78 வது சுதந்திர தினமா? குழப்பத்தில் மக்கள்
இந்தியா நாளையதினம் சுதந்திரதினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் இதற்காக தங்கள் உயிர் நீர்த்தவர்களையும் நாம் இந்த நாளில் நினைவு கூறுகிறோம்.
இந்த சுதந்திரம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்து அனைவருக்கும் தெரியும். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடி சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அந்த வகையில் இந்தாண்டு நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்ற அதேநேரம் இந்த சுதந்திர தினம் குறித்து பல்வேறு கேள்விகள் நிறைந்துள்ளது. இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்க முடியும்.
இந்தியா சுதந்திர தினம்
இந்தியாவில் நாளை கொண்டாடப்படும் இந்த சுதந்திர தினம் 77வது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமா. எத்தனையாவது சுதந்திர தினம் என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளான 1947 ஆகஸ்ட் 15ஐ முதலாம் சுதந்திர தினமாகக் கருத வேண்டுமா அல்லது அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1948 ஆகஸ்ட் 15ஐ தான் முதலாம் சுதந்திர தினமாகக் கருத வேண்டுமா என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.
இந்த கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் இது 78 வது சுதந்திர தினம். ஆனால் மத்திய அரசின் கூற்றுப்படி அதாவது 2022வெளியிட்ட செய்திக்குறிப்பில் 76வது சுதந்திர தினம் என்றே குறிப்பிட்டு இருந்தது.
அதன்படி பார்க்கும் போது நம் நாளைய தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தாண்டு அரசு தரப்பில் வெளியாகும் அனைத்து செய்திக்குறிப்புகளிலும் கூட 78ஆவது சுதந்திர தினம் என்றே கூறப்பட்டுள்ளது.
எனவே இந்தியா நாளை கொண்டாட இருக்கும் சுதந்திர கிடைத்த ஆண்டு 78 வது சுதந்திர தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |