ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்?
Life Style
By Pavi
மனிதன் ஒருவன் தனது வயதின் அடிப்படையில் ஒரு நாளக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.

எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?
இப்போதெல்லாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு நடைப்பயிற்சியே மிக எளிதான மற்றும் சிறந்த வழியாகும். நடைப்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு பல நோய்களையும் தடுக்கும்.

ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பலருக்கும் உரு கேள்வியாக இருக்கும். சிலர் சநினைப்பார்கள் ஒரு நாளைக்கு ஒருவர் 10 ஆயிரம் அடி நடக்க வேண்டும் என்று ஆனால் அது தவறு.
ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்றவாறு நடக்க வேண்டும். நீங்கள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

(5 முதல் 18 வயது வரை)
- 5 முதல் 18 வயது வரை உடல் வளர்ச்சி அடைவதால் ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு வெறுமனே நடப்பது மட்டும் போதாது அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இந்த வயதிலுள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 12,000 முதல் 15,000 அடிகள் வரை நடக்கலாம்.
(18 முதல் 40 வயது வரை)
- 18 முதல் 40 வயது வரை இது நாம் மிகவும் பரபரப்பாக இருக்கும் வாழ்க்கைக் கட்டமாகும். மேசை வேலைகளும், சீரற்ற வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே, தினமும் 10,000 முதல் 12,000 அடிகள் நடப்பது உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வயதில் தொடர்ந்து நடப்பது, வலுவான வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கவும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

(40 முதல் 60 வயது வரை)
- 40 வயதிற்குப் பின்னர் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் தொடங்குகின்றன. மேலும் மூட்டுப் பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, தினமும் தவறாமல் நடைபயிற்ச்சி செய்ய வேண்டும். இந்த வயதில், தினமும் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களால் ஒரே நேரத்தில் அவ்வளவு நடக்க முடியாவிட்டால், அதை காலை மற்றும் மாலை என இரண்டு பகுதிகளாகப் பிரித்து நடந்தால் போதும்.
முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்)
- முதுமையில் நடப்பதன் நோக்கம், சுறுசுறுப்பாக இருப்பதற்கும் தசை இறுக்கத்தைத் தடுப்பதற்கும் ஆகும். இந்த வயதில், நீங்கள் தினமும் 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பதை ஒரு இலக்காகவே வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முழங்கால் வலி அல்லது சமநிலை பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே நடக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US