நீங்கள் முட்டை பிரியரா? அப்போ ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பது தெரியுமா?
நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு அதிக பங்கு வகிக்கிறது. அதில் முட்டைக்கு தனி இடம் உண்டு.
ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும்.
மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்
நாள் ஒன்றுக்கு நாம் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்ற விபரத்தை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)பரிந்துரைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு முட்டைகளை சாப்பிடுவது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்தவகையில், ஒரு ஆரோக்கியமான நபர் வாரத்திற்கு 7 முதல் 10 முட்டைகளை உட்கொள்ளலாம்.
அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது விளையாட்டு வீரர்களாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 4அல்லது 5 முட்டைகளை சாப்பிட வேண்டும்.
இதய நோய் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |