சுவையான மைசூர் பாக் அல்வா செய்வது எப்படி? அட்டகாசமான ரெசிபி இதோ
பண்டிகைக்காலம் என்றாலே நாம் விரும்புவது இனிப்பு பண்டங்கள் தான் . அவ்வாறான இனிப்பு பண்டங்களை குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் எப்போதும் இனிப்பு பண்டம் சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.
அவர்களுக்கு கடைகளில் இனிப்பு வாங்கி கொடுப்பதை விட இதை வீட்டில் செய்து கொடுப்பது ஆரோக்கியமாக இருக்கும்.
அந்த வகையில் பண்டிகை மடடுமல்லாமல் எளிதான முறையில் அனைவரின் வீட்டிலும் ஸ்பெஷலாக செய்யபடுவது ஸ்வீட் தான் அந்த வகையில் நெய் மைசூர் பாக் அல்வா செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 100 g
- நெய் - 250 ml
- எண்ணை - 125 ml
- சக்கரை - 300 g
- தண்ணீர் - 250 ml
செய்யும் முறை
முதலில் கடலை மாவை 7 முதல் எட்டு நிமிடம் வரை வறுத்து எடுத்து கொள்ள வேன்டும்.
பின்னர் அதை எடுத்து சளித்து வைத்த பின்பு, இப்போது ஒரு பேனில் ஒரு கப் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
நெய் உருகி சூடானதும் இதில் ஒரு பாதி பங்கை சளித்து வைத்த கடலை மாவில் ஊற்றி கலந்து வைக்க வேண்டும். பின்னர் இன்னும் ஒரு பேனில் சர்க்கரை சேர்த்து அது நன்கு கம்பி பதம் வரும் வரை கிளற வேண்டும்.
பின்னர் நாம் வைத்த கடலைமாவுக்கரசலை அதில் ஊற்றி கெட்டியாகும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் இதை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஆறிய பின்பு சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறிக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |