AC யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? எவ்வளவு நேரம் பயன்படுத்துவது சரியானது?
தற்காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் ஏசி (AC) பயன்படுத்தப்படுகின்றது. ஏசியை பயன்படுத்துவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? என்பது தொடர்பில் பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது.
ஏசி தொடர்ந்து இயங்குவதால் அதன் முக்கிய பாகங்களான Thermostat, Compressor, Air Filterகள் போன்றவை பாதிக்கப்படும்.
வெப்பமான காலநிலையில் எவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இதுவாகும். மேலும் ஏசியில் இருந்து காற்று வெளியேறாது. இது போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஏசியை பயன்படுத்துகின்றோம். ஆனால் ஏசியின் Outdoor Unit சரியாக வெப்பநிலையில் இருக்கின்றதா என்பது குறித்து பலரும் கவனம் செலுத்துவது கிடையாது.
தொடர்ச்சியாக ஏசியை நிறுத்தாமல் பயன்படுத்துவது ஏசியின் ஆயுள்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் அது குறிப்பாக வெப்பமாகவோ அல்லது ஈரப்பதமாகவோ இருந்தால், அது 20 மணிநேரம் அல்லது அதற்கு மேல் இயங்கும். உங்கள் ஏர் கண்டிஷனர் பகலில் பல மணி நேரம் இயங்கும் போது, அது தொடர்ந்து செயல்படாது.
இது சுழற்சியில் இயங்கி, அவ்வப்போது அணைக்கப்பட வேண்டும். வெறுமனே, இது சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு சுழற்சியை இயக்க வேண்டும், பின்னர் மீண்டும் நிறுத்தி வைக்க வேண்டியது அவசியம்.
தொடர்ச்சியாக நிறுத்தாமல் பயன்படுத்தினால் அதிகப்படியான வெப்பத்தால் ஏசியுடைய Compressor பழுதடைந்து விடுகிறது. ஏசி தீப்பிடித்து ஏரிவதற்கும் இந்த Compressor சேதமடைவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
நம்மில் பெரும்பாலானோருக்கு ஏசியை எவ்வளவு நேரம் ஒரு நாளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலருக்கும் பூரண தெளிவு இருப்பது கிடையாது.
தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் நீண்ட நேரம் நீங்கள் ஏசியை பயன்படுத்தினால் ஒவ்வொரு மணிக்கும் குறைந்தது 5 முதல் 7 நிமிடத்திற்கு நிறுத்தி வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
இது பாதுகாப்பான முறையாக இருப்பதுடன் ஏசியின் நீண்ட நாள் பாவணைக்கும் துணைப்புரியும். மேலும் ஏசியில் இருக்கும் Compressor விரைவில் வெப்பமடைவதை தடுக்கலாம். அதனால் ஏற்படும் விபத்துக்களையும் தடுக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |