மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும்னு தெரியுமா?
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர், ஆக்சிஜன், உணவு போன்றவை எப்படி முக்கியமோ. அதே போல் தூக்கமும் இன்றியமையாதது.
மனிதன் இரவில் தூங்கவில்லை என்றால் மறுநாள் வேலை பார்க்கமுடியாத அளவிற்கு சோம்பேறியாக ஆகிவிடுவான்.
எனவே மனிதன் ஒழுங்காக தூங்கினால் மட்டுமே அவனது உடல் புத்துணர்ச்சியாக இருக்கிறது இல்லையெனில் உடலில் நீர்சத்து குறைந்து உடல் சோம்பேறியாக மாறுவதுடன் உடல் ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
தூக்கம் இவ்வளவு முக்கியமானதாக இருக்கின்ற போதிலும் சாதாரணமாக மனிதனால் எவ்வளவு காலம் தூக்கமாமல் இருக்க முடியும் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ராபர்ட் மெக்டொனால்ட் என்ற நபர் 1986ஆம் ஆண்டு 19 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்து உலக சாதனை படைத்துள்ளார். குறித்த விடயம் கின்னஸ் புத்தனத்தில் பதிவிடப்பட்ட போதும் பின்னர் அதனை மறுத்துவிட்டது.
மெக்டொனால்டின் சாதனைக்குப் பிறகு, இப்படி நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவுகளை காரணம் காட்டி இதுபோன்ற சாதனைகளை அங்கீகரிக்க கின்னஸ் முன்வரவில்லை.
மெக்டொனால்டிற்கு முன்பே, 17 வயதே ஆன ரேண்டி கார்ட்னர் மற்றும் ப்ரூஸ் மெக்கலிஸ்டர் என்ற இரு மாணவர்கள் தொடர்ந்து 11 நாட்கள் (264 மணி நேரம்) தூங்காமல் இருந்துள்ளனர்.
மனிதர்களால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியும் என்பதை கண்டுபிடிக்கும் அறிவியல் ஆய்விற்காக இந்த இரண்டு மாணவர்களும் இந்த சோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர்.
எனவே ஒரு மனிதன் 11 நாட்கள் மட்டுமே தூங்காமல் உயிர் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அவன் தூங்குவதற்காக செலவிடுகிறான் என்றும் கூறுப்பிடப்படுகின்றனர்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். 8 மணி நேரம் தூங்குபவர்களின் உடல் நிலை தான் நன்றாக இருக்கிறது என்றும், ஒருவன் தூங்கவே இல்லை என்றால் அவன் உயிர் வாழ்வதுதே சவலான விடயமாகிவிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |