FlyDubai விமானத்தில் அவசரநிலை! ATC-க்கு இந்திய விமானி ரகசிய எச்சரிக்கை விடுத்தது எப்படி?
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 174 பயணிகளுடன் புறப்பட்ட FlyDubai விமானம் FZ107 நடுவானில் சவூதி அரேபிய வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட மிகத் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதாவது, குறித்த விமானத்தின் விமானியான ஸ்மித்தை (Captain Smit Machchhar), அவரது சக விமானி ஒருவர் திடீரென தாக்கத் துவங்கியுள்ளார். அதாவது, அவர் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோதவைக்க முயல, அதைப் புரிந்துகொண்ட ஸ்மித், அவரைத் தடுக்க முயன்றுள்ளார்.

உடனே, அவசர காலத்தில் கதவு முதலானவற்றை திறப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடரி ஒன்றினால் ஸ்மித்தை சரமாரியாக தாக்கியுள்ளார் அந்த விமானி. ஸ்மித் படுகாயமடைந்த நிலையிலும், விமானிகள் அறையின் கதவைத் திறக்க பயணிகள் உதவியுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஸ்மித், துணை விமானியின் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும், விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் (Transponder) கருவியில் 7700 என்ற குறியீட்டைப் பதிவிட்டார்.
இக்குறியீடு பதிவானதும், ரேடார் திரையில் இந்த விமானம் இருக்கும் இடம் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும். இதன் மூலம் விமானம் ஒரு மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது என்பதை எவ்வித உரையாடலும் இன்றி தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் (ATC) உணர்ந்துகொண்டனர்.
7700 மற்றும் 7500 போன்ற Squawk Codes எதைக் குறிக்கின்றன?
ஒரு விமானம் நடுவானில் அவசரநிலையை எதிர்கொள்ளும்போது, விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எவ்வாறு ஆபத்தைத் தெரிவிக்கிறார்கள்? MAYDAY, PAN-PAN போன்ற அவசர அழைப்புகளின் பின்னணி என்ன?
குறிப்பாக, இந்தச் சம்பவத்தில் சவூதி அரேபியாவின் Tabuk விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் விமானம் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தியது? அங்கிருந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
விமான அவசரநிலைகளில் விமானிகள் மற்றும் ATC கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இந்தக் காணொளியில் வாயிலாக விரிவாகப் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |