குளவிக்கூட்டினை சேதம் வராமல் களைப்பது எப்படி? இத மட்டும் செய்யாதீங்க
வீட்டில் குளவி வந்து சென்றாலே சிலருக்கு பயமாக இருக்கும். அதையும் தாண்டி வீடுகளில் கூடு கட்டி விட்டால் அதனை எடுப்பது பெரும் போராட்டமாக இருக்கும்.
மூலைகள், ஜன்னல்கள், கதவுகள் அல்லது கூரை சுவர்கள் ஆகிய இடங்களில் அதிகமாக குளவி கூடு கட்டி வாழும். இது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பூச்சிகளில் ஒன்று என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறிய பூச்சி தானே என கவனிக்காமல் இருக்கும் பொழுது அது உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமாக தாக்கும். குளவி கொட்டியவுடன் சருமத்தில் கடுமையான எரிச்சல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் ஒவ்வாமை எதிர்வினைகள் கூட ஏற்படலாம்.
அந்த வகையில், நாம் என்ன தான் குளவியை கூடு கட்டவிடாமல் பார்த்துக் கொண்டாலும், சில சமயங்களில் கூடு கட்டி விட்டால் எப்படி அகற்றலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சவர்கார தண்ணீர்
உங்கள் வீட்டில் குளவிகள் நிறைந்து விட்டால் தண்ணீரில் சவர்காரம் கொஞ்சம் போட்டு கரைத்து கொள்ளவும். அதனை ஒரு போத்தலில் ஊற்றி குளவி கூடு இருக்கும் இடத்தில் தெளிக்கவும். இப்படி தெளிக்கும் பொழுது சவர்காரம் கலந்த தண்ணீர் குளவியின் இறக்கையில் ஒட்டிக் கொள்ளும். இதனால் பெரியளவில் பறக்க முடியாது. இந்த முறையை பயன்படுத்தி குளவியை இலகுவாக அகற்றலாம்.
புதினா எண்ணெய் தண்ணீர்
குளவிகளை எந்தவித சேதமும் இல்லாமல் விரட்ட நினைப்பவர்கள் புதினா எண்ணெய் வாங்கி தண்ணீருடன் கலந்து போத்தலில் போட்டு, குளவிகள் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். இப்படி தெளிக்கும் பொழுது குளவிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
புகை போடுதல்
உலர்ந்த மரம் அல்லது சில அட்டைப் பெட்டிகளை பற்ற வைத்து, அதிலிருந்து வரும் பூகையை குளவிகள் உள்ள இடத்தில் பிடிக்கவும். இப்படி செய்யும் பொழுது குளவிகள் புகை தாங்க முடியாமல் ஓடி விடும். அத்துடன் வேப்ப இலைகளை புகைத்து பிடிக்கும் பொழுது குளவிகள் ஓடி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
