பாம்பின் விஷம் மனிதனின் உயிரைப் பறிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்னு தெரியுமா?
பொதுவாகவே பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. இப்படி பாம்பு என்றாலே அனைவரும் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான்.
பாம்பின் விஷம் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கது என்பது அனைவரும் அறிந்ததே.
உலகிலேயே மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக திகழும் பாம்பின் விஷம் மனிதர்களை முடக்குவதற்கும் உயிரை பறிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
பாம்பு கடித்துவிட்டால், எவ்வளவு விரைவாக சிகிச்சை அளித்தால் உயிரை காப்பாற்ற முடியும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகில் உள்ள அனைத்து பாம்புகளும் விஷமுடையவை இல்லை என்றாலும் பாம்புகளிடம் எப்போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
உலகிலேயே மிகவும் கொடிய விஷமுள்ள பாம்பாக ராஜ நாகம் அறியப்படுகின்றது.இந்த வகை பாம்புகள் இந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றது.குறிப்பாக கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவை அதிகமாக வசிக்கின்றது.
ராஜ நாகம் மனிதனை கடிக்கும் பட்சத்தில் 200 முதல் 500 மில்லிகிராம் விஷத்தை மனிதனின் உடம்பில் செலுத்தும்.
பாம்பின் விஷம் மனிதனை எவ்வளவு விரைவில் பாதிக்கும்?
பொதுவாக ராஜ நாகம் தீண்டினால் 2 முதல் 5 மணி நேரத்துக்குள் மனிதன் உயிரிழக்க நேரிடும்.மிக விரைவில் சிகிச்சை மேற்கொண்டால் மாத்திரமே உயிரை காப்பாற்ற முடியும்.
ராஜ நாகம் தீண்டினால் ஆரம்பத்தில் மங்கலான பார்வை, உடல் முடக்கம், மயக்கம் போன்றவற்றை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
ஏனைய பாம்புகளுடன் ஒப்பிடும் போது ராஜ நாகம் அதிக விஷத்தை உற்பத்தி செய்கிறது. ராஜ நாகத்தின் பத்தில் ஒரு பங்கு விஷம் கூட கடிபட்ட நபரின் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
பொதுவாக பாம்புகளுக்கு வலுவான தாடைகள் இருப்பதில்லை அதனால் பாம்புகளால் தங்களை தற்காத்துகொள்வதற்கும் இரையை வேட்டையாடவும் சிரமப்படும். அதனால்தான் இயற்கையாகவே பாம்புகளுக்கு விஷம் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |