காண்டாமிருகம் இவ்வளவு வேகமாக ஓடுமா? அசரவைக்கும் காணொளி
பொதுவாகவே அதிக உடல் பருமன் கொண்ட விலங்குகள் விரைவாக ஓடாது என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இந்நிலையில் பெரிய காண்டாமிருகம் வேகமாக ஓடும் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மூக்குக்கொம்பன் என்னும் காண்டாமிருகம் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் பட்டியலில் யானைக்கு அடுத்த இடத்தை பெறுகின்றது.
வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே இருப்பதாக ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றது.
ஆப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் காணப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் வாழும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவைகள்.
இவை இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணியாகும். ஏறத்தாழ 60 ஆண்டுகள் வரையில் காண்டாமிருகங்கள் உயிர்வாழ்கின்றன.
அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவையாகவே இருக்கின்றன.
ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாக ஒடும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
காண்டாமிருகங்கள் மணிக்கு 40 கி.மீ தூரம் வரையில் ஓடகூயது என்பது சற்று வியப்பான விடயம் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |