ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாளொன்றுக்கு எவ்வளவு தூரம் நடக்கணும்?
தற்போது இருப்பவர்களில் 4-ல் 3 சதவீதமானவர்கள் ஆரோக்கிய குறைப்பாட்டினால் அவஸ்தைப்படுகிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்படுகின்றன.
அந்த வகையில், “ தினசரி உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட காலம் வாழவும் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்” என போலந்து மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே போன்று, நடைபயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவு முறை இருந்தால் இதய ஆபத்துகள் குறையும் என லோட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மசீஜ் பனாச் கூறியுள்ளார்.இது போன்ற பல கருத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் நடைபயிற்சி செய்வதால் மனிதர்கள் ஏகப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம். காலை வேளைகளில் தூக்கத்துடன் நடப்பதை விட மாலை வேளைகளில் நடப்பது சிறந்தது.
தினமும் நடைபயிற்சி செய்வதால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்ற கருத்து வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
அப்படியாயின் ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என நினைப்பவர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? இதனால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |