Sweets சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா? நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சிலர் அதிகமாக இனிப்புக்களை சாப்பிடுவதால் முகப்பருக்கள் ஏற்படும் என நினைத்து கொண்டிருப்பார்கள்.
இது போன்ற பழக்கங்கள் முகப்பருக்கள் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரையை இயற்கை சர்க்கரை, சேர்க்கப்பட்ட சர்க்கரை என இரண்டு வகையாக பிரிக்கலாம். இயற்கை சர்க்கரை எனப்படுவது காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் கூடுதலாக சேர்க்கப்படும் சர்க்கரையானது பானங்கள், ஸ்மூத்தீஸ் போன்ற துரித உணவுகளில் இருக்கும். இவை பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சர்க்கரையால் முகப்பருக்கள் தோன்றுமா? இதனால் வேறு என்னென்ன தீமைகள் ஏற்படும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இனிப்பு சாப்பிட்டால் முகப்பரு ஏற்படுமா?
1. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. இது மூளைக்கு அழற்சியை ஏற்படுத்தி அறிவாற்றலை பாதிக்கிறது. இதனால் சிலருக்கு பதற்றம், மனசோர்வு மற்றும் மனநிலை பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் வரலாம்.
2. அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ள பொருட்களை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. தொடர்ந்து சர்க்கரையை உட்கொள்ளும் ஒருவருக்கு தொற்றுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
3. இயற்கையாக நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் குறையும் பொழுது அதிக அளவு உட்கொள்ளும் சர்க்கரையை செரிமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் குடல் வீக்கம் அடைந்து உடல் உபாதைகளை ஏற்படலாம்.
4. இனிப்பு பண்டங்கள் அதிகமாக உட்கொள்ளும் பொழுது முகப்பருக்கள் வரும் என நேரடியாக கூற முடியாது. மாறாக அதிக அளவு இனிப்பு உட்கொள்ளும் பொழுது இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகி சரும துளைகளை அடைக்கலாம். இதன் விளைவாக கூட முகப்பருக்கள் தோன்றலாம்.
5. இனிப்பு வகைகள் அதிகமாக சாப்பிடும் ஒருவருக்கு இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் சருமத்தில் முகப்பருக்கள் மற்றும் வெடிப்புக்கள் ஏற்படலாம். அத்துடன் சரும நிறத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |