பாரம்பரியமாக அணியப்படும் புடவை எப்படி உருவானது என்று தெரியுமா?
பாரம்பரியமாக அணியப்படும் ஆடைகளுள் புடவையும் ஒன்றாகும்.
இந்த புடவைகள் பல்வேறு வகைப்படும். பட்டு, காட்டன், ஷிபான் என பல வகைகள் காணப்படுகின்றன.
புடவையை அறிமுகப்படுத்தியவர் யார்?
முதலில் புடவையை அணியத்தொடங்கியவர்களே சங்ககால பெண்கள் தான்.
சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் தனது அன்றாட அணியும் ஆடையாக புடவையை தான் தேர்ந்தெடுத்தார்கள்.
புடவை அணியும் முறை
பண்டைய காலத்தில் தொப்புள் தெரிய கட்டப்பட்ட புடவை, காலப்போக்கில் அவ்வாறு அணியக்கூடாது என்று நியதி ஒன்று விதிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை அணியும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆரம்பக்காலத்தில் பட்டுப்புடைவகள் தான் பிரபலமாக இருந்தது.
வீர மங்கைகளான ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் புடவை அணிந்தவாரே போரிட்டனர்.
ஆரம்பக்காலத்தில் புடவைக்கும் மேலாடைக்கும் சம்பந்தம் அற்றது போன்று தான் அணிந்தனர். ஆனால் காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி விட்டனர்.
புடவையின் வகைகள்
புடைவைகள் 80 விதமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல விதங்கள் காணப்படுகின்றன.