சாணக்கிய நீதி: எதிரியை எளிமையாக வெல்லணுமா? இந்த தந்திரங்கள் தெரிந்தாலே போதும்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் பெற்றவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது. அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் தங்களை விட பலம் வாய்ந்த எதிரிகளையும் எவ்வாறு எளிமையாக வீழ்த்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கையில் எதிரிகளையும் போட்டியாளர்களையும் தவிர்த்து யாராலும் வாழவே முடியாது. உலகில் கடைசியாக இருநபர்கள் இந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு போட்டி இருக்கும். ஆனால் எதிரிகள் தான் வெற்றியின் முக்கிய அங்கம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
எதிரிகளை வீழ்த்தும் தந்திரங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் தங்களின் இலக்கில் முழுகவனத்தையும் வைத்திருப்பவர்களை யாராலும் வீழ்த்திவிட முடியாது.
சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் வெற்றியடைய வேண்டும், எதிரிகளை எளிமையாக வீழ்த்த வேண்டும் என்றால், எதிரியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் எதிரி தன்னை விட பலவீனமானவர் என்றும் ஒருபோதும் மமதையை வளர்த்துக்கொள்ள கூடாது.
எதிரியின் பலத்தையும் திறமையையும் ஒப்புக்கொள்ளும் போது நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க முடியும். இது எதிரிகளை வீழ்த்தும் மிக முக்கிய வியூகம் என குறிப்பிடுகின்றார்.
எதிரிகளின் செயல்களையும், அமைதியையும் உன்னிப்பாகக் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இது எதிரியின் அடுத்த நகர்வு பற்றிய விளக்கத்தை எமக்கு கொடுக்கும். அது தெரிந்தால் எவ்வளவு பலம் வாய்ந்த எதிரியாக இருந்தாலும் எளிமையாக வீழ்த்திவிடலாம்.
என்று சாணக்கியர் கூறுகிறார். எதிரியின் செயல்பாடுகளைப் புறக்கணிப்பது ஒருபோதும் புத்திசாலித்தனமாக அமையாது. எதிரியின் ஒவ்வொரு நகர்வையும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சாணக்கியரின் கூற்றுப்படி எதிரியை வெல்ல வேண்டும் என்றால் எதிரியின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இது எதிரியை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் மூலம் சரியான நேரத்தில் வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
எதிரிகளை வீழி்த்த வேண்டும் என்றால் ஈகோவை முற்றிலும் விட்டுவிட வேண்டும். ஈகோ யாரையும் தங்களை விட உயர்ந்தவர்களாக பார்க்க விடாது. இந்த குணம் இருந்தால் ஆபத்து உறுதி என்கின்றார் சாணக்கியர்.
மமதை என்பது எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே துணைப்புரியும். இது தெளிவான சிந்தனைக்கு மிகப்பெரும் தடையாகவே அமையும் என சாணக்கியர் கூறுகிறார்.
வாழ்வில் அவமானங்களை எதிர்கொள்ளும் போது, கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு முன்னேற்றத்துக்கான வழிகள் குறித்து அமைதியாக சிந்திக்கும் தந்திர குணம் வாழ்வில் எதிரிகளை வீழ்த்தி வெற்றியடைய இன்றியமையாதது என சாணபக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |