கூந்தல் அதிகமா உதிருதா? அப்போ இதையெல்லாம் உடனே நிறுத்துங்க...
பெண்களுக்கு அழகு சேர்ப்பதே அவர்களின் கூந்தல் தான். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு மற்றும் தவறான உணவுமுறை ஆகியன கூந்தல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன.
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி கூந்தல் உதிர்வு உளவியல் ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
அந்த வகையில் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த நாம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முடியுதிர்வை கட்டுப்படுத்தணுமா?
கூந்தல் வலிமையிழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.
முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.
இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.
முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றது. ரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை முடிந்தவரை தவிர்த்துக்கொள்வது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |