இயற்கையாகவே புருவங்களை அடர்த்தியாக்கணுமா? இதை செய்தாலே போதும்
பொதுவாகவே பெண்களுக்க தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அலாதி இன்பம் கிடைக்கின்றது.
முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை.
ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
எவ்வளவு அழகான கண்களை கொண்டிருந்தாலும் புருவங்கள் நேர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இல்லாவிட்டால் அந்த கண்களுக்கு ஈர்ப்பும் கவர்ச்சியும் இருக்காது.
பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. புருவத்தை இயற்கை முறையில் எவ்வாறு அடர்த்தியாக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் புருவங்களை இயற்கை முறையில் அடர்த்தியாக மாற்றுவதற்கான சிறந்த தெரிவாகும். அதனை புருவங்களில் தடவி பத்து நிமிடங்கள் வரையில் நன்றாக மசாஜ் செய்து ,30 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். மேலும் இந்த எண்ணெயை இரவில் புருவங்களில் தடவி காலையில் குளித்தால் அதிக பலன் கிடைக்கும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை நேரடியாக புருவங்களில் தடவி 20 நிமிடங்கள் வரையில் உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் புருவங்கள் இயற்தையாகவே அடர்த்தியாக மாறுவதை கண்கூடாக அவதானிக்க முடியும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை புருவங்கள் அடர்த்தியாக மாறிய பின்னரும் வாரம் இருமுறை பயன்படுத்தினால் எப்போதும் புருவங்களை அழகாக பராமரிக்க முடியும்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் புருவங்களை அடர்த்தியாக்கும் செயன்முறையை சிறப்பாக ஊக்குவிக்க கூடியது. ஆமணக்கு எண்ணெயில் பஞ்சை தோய்த்து புருவங்களில் தடவி விட்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த எண்ணெய் சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் புருவங்களை அடர்த்தியாக மாற்ற உதவுகின்றது.
தேங்காய் எண்ணெய்
புருவங்கள் அடர்த்தியாக மாற்ற தேங்காய் எண்ணெயும் சிறந்த தெரிவாக இருக்கும். இது புருவங்களுக்கு இயற்கையான பளபளப்பைக் ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது. தேங்காய் எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவுவதும் புருவங்களை அடர்த்தியாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகின்றது.
வெங்காய சாறு
அடர்த்தியான புருவங்களுக்கு வெங்காய சாறு பெரிதும் துணைப்புரியும். அதன் வாசனை சிலருக்கு பிடிக்காது.ஆனால் வெங்காயச் சாற்றை பயன்படுத்தினால் புருவங்கள் விரைவில் அடர்த்தியாக மாறும். இந்த வாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து புருவங்களில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால் சிறந்த பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |