கொலஸ்ரோலை குறைக்கும் சியா விதைகள்.. இதய நோயுள்ளவர்கள் சாப்பிடலாமா?
பொதுவாக மனித உடலில் அளவிற்கு அதிகமாக கொலஸ்ரோல் இருப்பது இதய நோயுள்ளவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது.
இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தை நம்புவதை விட வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு தினச்சரி எதாவது முயற்சி எடுத்து கொண்டிருப்பது சிறந்தது.
அந்த வகையில் கொலஸ்ரோல், இதய நோயுள்ளவர்கள் சியா விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவர்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும்.
ஏனெனின் சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, இது எடை இழப்பு, இதயம் பாதுகாப்பு, கொலஸ்ரோலை கட்டுபடுத்தல் ஆகிய வேலைகளை பார்க்கிறது.
இது போன்று வேறு என்னென்ன விடயங்களை சியா விதைகளை பார்த்து கொள்கிறது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சியா விதைகள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. வீக்கத்தைக் குறைத்து இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அத்துடன் இதய ஆரோக்கியம் செயற்பாட்டிலும் முக்கிய பங்காற்றுகின்றது.
2. தினச்சரி சாப்பிடும் சியா விதைகள் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இதனால் இதயம் சாரந்த நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.
3. சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து கரையக்கூடியது. இது செரிமான அமைப்புடன் பிணைப்பை உருவாக்கி எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது.
4. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும் ஆற்றல் சியா விதைகளுக்கு இருக்கின்றது. இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்களும் இதனை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
5. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கின்றது. இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |