viral video: நடனமாடி துணைக்கு காதலை வெளிப்படுத்தும் பறவைகள்... குவியும் லைக்குகள்
துணைக்கு காதலை வெளிப்படுத்த இரு பறவைகள் செய்யும் விசித்திரமான அசைவு அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் துணையை நேர்தெடுப்பதும் பிரிவதும் சமூக வளைத்தளங்களில் தான் என்ற அவல நிலையில் தான் மனித சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றது.
ஆறு அறிவினைக் கொண்ட மனித இனமே அவ்வாறு இருக்கும் பட்சத்தில் விலங்குகளும் பறவைகளும் ஒரு துணையுடன் வாழ்நாள் முழுவதும் இருப்பது சாத்தியமே இல்லை என்று நாம் நினைக்ககூடும்.
ஆனால் குறிப்பிட்ட சில பறவை இனங்கள் ஒரே துணையுடன் வாழ்கின்றன என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுபகின்றன. அப்படியும் இவ்வுலகில் சில உயிரினங்கள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் தன் துணைக்கு காதலை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு பறவைகள் மாறி மாறி விசித்திரமான அசைவை வெளிப்படுத்தும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |