தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற ஊழியர்! எப்படி தெரியுமா?
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் ஒருவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் ஒரு ஆண்டாக வேலை செய்யாமல் 66 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரெட்டிட் தளத்தில் அவர் எழுதியுள்ள பதிவில்,
ஹார்ட் வொர்கிற்கு பதில் ஸ்மார்ட் வொர்க் எப்போதும் கைகொடுக்கும் என கூறி, தான் பின்பற்றிய டெக்னிக்கையும் தெரிவித்துள்ளார்.
அதாவது, automated process டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்டாக தன்னுடைய வேலை செய்து வந்துள்ளார்.
தினமும் 10 நிமிடம் அதற்காக செலவழித்து அன்றைய நாள் வேலை செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
சட்ட நிறுவனம் ஒன்றில் ஆவணங்களை கிளவுட் பேஸ்டாக மாற்றி பாதுகாப்பது தான் அவருடைய வேலையாக இருந்துள்ளது.
அதற்காக ஆட்டோமேட்டேட் புரோசஸ் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்ட அவர், காலை முதல் மாலை வரை வீடியோ கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஆனால், அவருடைய வேலை முறையாக நடந்து மாத சம்பளமும் தவறாமல் வந்துள்ளது. இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.
ஸ்மார்ட்டாக வேலை செய்த அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.