2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட நபர்! இறுதியில் சிக்கியது எப்படி?
ஜப்பானைச் சேர்ந்த நபரொருவர், உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி 2 ஆண்டுகளில் 1,095 தடவைகள் இந்திய மதிப்பில் சமார் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை காசே கொடுக்காமல் சாப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் நாகோயா என்ற பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய டாகுயா ஹிகஷிமோட்டோ என்பவர், ஜப்பானில் இருக்கும் பிரபல 'Demae-can' எனும் உணவு டெலிவரி செயலியில் தினமும் விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்பவரிடம் வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டுப் போகச் சொல்லிவிடுவாராம்.
அதன் பின்னர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுவிட்டு, உணவு தவறான முகவரியில் டெலிவரி செய்துவிட்டதாக கஸ்டமர் கேரிடம் பேசி ஆர்டர் செய்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வராம். இது போல் சுமார் 1095 முறை மாட்டிக்கொள்ளாமல் ஏமாற்றியிருக்கின்றார். இந்த விடயம் வெளியுலகுக்கு தெரிய என்ன காரணம் என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |