இந்த மாதிரி விரல் இருக்கவங்கள மட்டும் வாழ்நாளில் நம்பாதீர்கள்....ஆபத்தானவர்கள்!
நம் விரல்களை வைத்து நம் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் கணிக்க முடியும் என்கிறது ஜோதிடம்.
ஜோதிடத்தை தாண்டி நமக்கு நடக்க இருக்கும் பலன்கள், குண நலன்கள் எப்படி இருக்கும் என்பதை விரல் அமைப்பை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்க கை பகுப்பாய்வு அகாடமி (American Academy of Hand Analysis) ஒருவரின் விரல்களின் அமைப்பை வைத்து, அவரின் வாழ்க்கையையும், அவரின் குண நலன்களை சொல்ல முடியும் என்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூர்மையான கை விரல்
ஒருவருக்கு மிகவும் கூர்மையான விரல் அமைப்புகள் இருந்தால் எச்சரிக்கையுடன் பலகுங்கள். சில சமயங்களில் தவறான ஆலோசனை கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களின் வேலை விஷயமாக மட்டும் பேசுவார்கள்.
வேலை முடிந்தவுடன் திரும்பிக் கூட பார்க்காதவர்களாக இருப்பார்கள்.

சிறிய விரல்கள்
ஒருவருக்கு சிறிய விரல்கள் இருக்க கூடியவர்கள் மிக விரைவில் கோபப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் வேலையைச் செய்வதில் மிகவும் சலித்துக் கொள்ளமாட்டார்கள். வேலை விஷயத்தில் மற்றவர்களை விட முன்னால் இருப்பார்கள்.
அகலமான விரல்கள்
ஒருவர் அகலமான, தடிமனான விரல்களைக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதை கண்களை மூடிக்கொண்டு நம்புவதை தவிர்ப்பது நல்லது.
அத்தகையவர்கள் சுதந்திரமான இயல்புடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மற்றவருக்குத் தவறாக இருந்தாலும், நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் சரி அதை குறித்து எதுவும் தன் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவார்கள்.

நீளமான விரல் கொண்டவர்கள்
இயல்பை விட அகலான விரல்களைக் கொண்டவர்களைப் போலவே, இயல்பை விட நீளமான விரல்களைக் கொண்டவர்கள், ஒவ்வொரு விஷயத்தின் அடிப்படையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
எந்த பிரச்னைகளையும் தீர்க்கும் நல்ல தீர்வு கொண்டவர்கள் என்பதால் இவர்களை நம்பலாம்.

சதுரமான விரல் நுணி
கை ஜோதிட படி ஒரு நபரின் விரல்கள் சதுரமாக இருந்தால், அந்த நபர் மிகவும் உண்மையானவராக, நேர்மையானவராக இருப்பார்.
இவர் தங்களின் உறவைப் பேணி பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள்.