பறவைகள் வீட்டில் கூடு கட்டினால் அதிர்ஷ்டமா? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?
வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது வீட்டிற்குள் நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும்.
பறவைகள், நாய்கள் என எதுவாக இருந்தாலும், நம் வாழ்வில் இன்பம், துன்பம் என அனைத்து சூழலிலும் அந்த நிலையையே மாற்றும் தன்மை அவைகளுக்கு உண்டு.
இந்த பதிவில் பறவைகள் வீட்டில் கூடு கட்டினால் அதிர்ஷ்டத்தை தருமா? எந்த பறவைகள் வீடுகளில் வளர்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சிட்டுக்குருவி
கிராமப்புறங்களிலும், வயல்வெளிகளிலும் சுற்றித் திரியும் சின்னஞ்சிறு பறவையான சிட்டுக்குருவி வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரும் என நம்பப்படுகிறது.
தெய்வ நம்பிக்கையை அதிகப்படுத்தும் சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டினால், ஒருபோதும் அதை கலைக்க வேண்டாம்.
உதாரணத்திற்கு, திருமணமான தம்பதியினர் வீட்டில் குடியேறினால், அந்த வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் தற்போதோ சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, அவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் போனதும், தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு காரணம்.
எனவே உங்களால் முடிந்தளவு சிட்டுக்குருவிகள் வீட்டிற்குள் வரும் வண்ணம் சிறிது வைக்கோல், தண்ணீர் மற்றும் உணவு வைத்து உதவிடுங்கள்.
பறவைகளின் புகைப்படங்கள்
வாஸ்து சாஸ்திரங்களின்படி பறவைகள் மிகவும் மங்களகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஒரு சில பறவைகள் வீட்டில் நேர்மறை எண்ணங்களை பரப்பக்கூடியவை, பறவைகளின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
இதேபோன்று பறவைகளுக்கு உங்களால் இயன்றளவு உணவளிப்பதும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
Love Birds
ஒருஜோடி Love Birdsகளை நீங்கள் வளர்ப்பதாக முடிவெடுத்துவிட்டால், அதனுடைய கூடு வடகிழக்கு திசையை நோக்கி இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள், அவைகள் இலகுவாக சுற்றித்திரியும் வண்ணம் காற்றோட்டமான சூழலை உருவாக்கிக் கொடுக்க தவறிவிடாதீர்கள்.
பறவைகளை வளர்ப்பது என முடிவெடுத்துவிட்டால் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி அதிர்ஷ்டத்தை பெருக்கலாம்!!!
Pictures: Northwest