பாலைவனத்தில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அழகிய வீடு! இதன் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள். அதில் முக்கிய பங்காக தனது வீட்டையும் தனிமையில் அமைக்க பலரும் விரும்புகிறார்கள்.
ஆனால், ஒரு நவீன வீட்டில் இருக்கும் வசதிகளை ஆடம்பரமாக விரும்புகிறார்கள். அந்த வகையில் எத்தனையே வித்தியசமான வீடுகளை கண்டிருப்போம், ரசித்திருப்போம்,
அப்படி அமெரிக்கா நிறுவனத்தின் புதிய படைப்பான எல் சிமெண்டா யூனோ என பெயரிடப்பட்ட தனிமைப்படுத்த வீடு பலரையும் ஈர்த்துள்ளது. இந்த அழகிய வீடானது கலிபோர்னியாவில் உள்ள ஜோசுவா என்ற பாலைவனத்தில் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பெரிய வீடானது, 12 கோடிக்கு விற்பனையாக உள்ளது. மேலும், இந்த அழகிய வீடு ஐந்து கிலோ மீட்டருக்கு மக்கள் வசிக்காத இடத்தில் பாறைகள் புல்வெளிகள் மூடப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதே இதன் தனி சிறப்பாக அமைகிறது.
இந்த வீட்டில், 3டி பேனல்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இதன் ஒளி விலக்குகள் இரவில் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.