ஹொட்டல் சுவையில் முட்டை கலக்கி! 10 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?
இன்று அசைவ பிரியர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் உணவுகள் என்றால் முட்டை, மீன், கோழி இவற்றினையே எடுத்துக் கொள்கின்றனர்.
முட்டையினை பல விதங்களில் சமைத்து சாப்பிடுவதையும் நாம் அவதானித்து வருகின்றோம். இன்றும் பலரின் தெரிவாக இருப்பது முட்டையில் கலக்கியே. இவ்வாறு அனைவரும் விரும்பும் முட்டை கலக்கியை மிகவும் சுலபமாக தயார் செய்வதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 2
மிளகாய்த் தூள், மிளகுத்தூள் - சிறிது
சிக்கன்/மட்டன்/ சால்னா - 2 கரண்டி
நறுக்கிய மல்லித்தழை - சிறிது
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
பின்பு அதில் சிக்கன் / மட்டன் / சால்னா குழம்புகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு கரண்டி ஊற்றி கலக்கவும்.
இந்த கலவையில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவு.
தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய்விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும்.
பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்துவிடவும். நான்கு பக்கமும் மடித்துவிட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, மல்லித்தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான முட்டை கலக்கி தயார்.
