உடல் எடையை மடமடவென குறைக்க வேண்டுமா? கொள்ளு இட்லி செய்ங்க
உடல் எடையை இலகுவாக குறைக்க இனி காலை உணவு இட்லியை கொள்ளு வைத்து செய்ங்க.
கொள்ளு இட்லி
கொள்ளு வைத்து இட்லி செய்ய யாருக்கெல்லாம் தெரியும். பலருக்கும் அதை எப்படி சமைப்பது என்று தெரியாது. நாம் ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்போம்.
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு என நம் தாத்தா, பாட்டி பலமுறை சொல்லக்கேட்டிருப்போம். இது உடலில் கொழுப்பை கரைப்பதில் சிறந்த பங்கு எடுத்தாலும் இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
இந்த கொள்ளு இட்லியில் ஏராளமான வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து என பல சத்துக்கள் இருக்கின்றது. இதை ரசம், துவையல், பொடி என்பவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் உளுத்தம் பருப்பு
- 3 கப் கொள்ளு பருப்பு
- 1 தேக்கரண்டி வெந்தய விதைகள்
- உப்பு (சுமார் 4-5 தேக்கரண்டி)
- 1 தேக்கரண்டி எண்ணெய் (அச்சுகளில் நெய் தடவுவதற்கு மட்டும்)
வழிமுறைகள்
முதலில் உளுத்தம்பருபை நன்றாக கழுவி அதனுடன் வெந்தயத்தைச் சேர்த்து, 3-4 முறை நன்றாகக் கழுவவும். இந்த இரண்டு பொருட்களையும் போதுமான தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, பருப்பை மீண்டும் நன்றாக அலசி கழுவ வேண்டும்.
பின்னர் இந்த பரும்பு மற்றும் உழுந்தை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்னர் இந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி புளிக்க வைக்க வேண்டும். விருப்பபட்டால் உப்பு சேர்க்கலாம்.
இந்த மாவில் உப்பை போட்டவுடன் உப்பு பருப்புடன் நன்றாகப் சேரும் வரை, கலவையை உங்கள் கையால் சுமார் 2-3 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும்.
8-9 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஒரு சூடான இடத்தில் வைக்கவும். (இரவு முழுவதும் ஒரு சூடான இடத்தில் வைக்கவும்).
அடுத்து மாவை எடுத்து இட்லி செய்ய ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். அல்லது உங்கள் இட்லி பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். இட்லி ஸ்டாண்டிற்குள் வைக்கும்போது அதன் அடிப்பகுதி நீர் மட்டத்திற்கு மேலே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பாத்திரத்தில் இட்லி ஒட்டாமல் வர ஸ்டாண்டில் சிறிது எண்ணெய் தடவவும்.
இப்போது இட்லி அச்சுக்களில் அதன் அளவு நிரம்பும் வரை ஒரு கரண்டியில் மாவு எடுத்து ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பாத்திரத்தை மூடியை கொண்டு மூடவும்.
இட்லியை குறைந்தபட்சம் 10-12 நிமிடங்கள் அவிய வைக்கவும். பின்னர் ஒரு கத்தியையோ அல்லது பல் குச்சியையோ குத்திப் இட்லி பதத்தை பரிசோதிக்க வெண்டும். அது சுத்தமாக வெளியே வர வேண்டும். இல்லையென்றால் இன்னும் 4-5 நிமிடங்கள் சமைக்க விடவும்.
இதன் பின்னர் பாத்திரத்தில் இருந்து இட்லியை வேறாக எடுத்து அதை பொடி சட்னி சாம்பார் ரசம் போன்றவற்றுடன் காலை இரவு உணவாக செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |