சந்தேகப்புத்தி கொண்ட திகதிகளில் பிறந்தவர்கள் இவர்கள் தான் நீங்க பிறந்த திகதி என்ன?
எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.
அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திகதியில் பிறந்தவர்கள் சந்தேகப்புத்தி கொண்டவர்கள் என எண்கணிதத்தின் மூலம் கூறப்படுகின்றது. அது எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்கணிதம்
4ம் திகதிகளில் பிறந்தவர்கள் ஒரு ஆக்கப்பூர்வமான நபர். இவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு நல்ல தலைவன் என்ற பட்டத்தையும் பெறுவார்கள்.
எப்படி இருப்பினும் இவர்கள் ஒவ்வொரு காரியத்திலும் மிகுந்த சந்தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக அவர் அடிக்கடி காதல் தொழில் வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
13 ம் திகதிகளில் பிறந்தவர்கள் கல்வியில் நிறந்த சாதனை படைத்தவர்களாக இருப்பார்கள்.ஆனால் இவர்களுக்கு குறுகிய மனநிலை மற்றும் பிடிவாத இயல்பு காரணமாக வாழ்க்கையில் நிறைய போராட்டம் நிலவும்.
இதனாலேயே இவர்கள் சந்தேகத்திற்கிடமான செயல்களை செய்வதால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் உள்ளன. எண் கணிதப்படி 22ம் தேதி பிறந்தவர்கள் கொஞ்சம் திறந்த மனநிலை அற்றவர்கள்.
இவர்கள் தங்கள் ரகசியங்களை யாரிடமும் விரைவாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த மக்கள் சிறிய விஷயங்களில் மிகவும் சந்தேகப்படுகிறார்கள். 31 ம் திகதி பிறந்தவர்கள் பல விஷயங்களில் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.
இந்த மக்கள் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுகிறார்கள். என்னதான் இருந்தாலும் இவர்களின் சந்தேக குணத்தால் சில சமயங்களில் சிறிய பிரச்சினைகளைக் கூட பெரிதாக்குகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |