மலையை உணவாக உண்ணும் பாமர மக்கள்: எங்கு தெரியுமா?
ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் மலையை உணவாக சாப்பிடும் மக்களின் தகவல் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.
மலையை சாப்பிடும் மக்கள்
இந்த உலகில் மலைப்பிரதெசங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் நாமும் தலைப்பகுதிகளை பார்த்திருப்போம். ஆனால் சாப்பிட தாட்டோம்.
ஆனால் தற்போது இந்த பதிவில் சொல்லப்போகும் மலையானது மக்கள் பார்ப்பதுடன் சாப்பிடவும் செய்கிறார்கள்.இந்த இடம் ஒரு தீவு.
இது ஜம்புத்வீபின் தென்மேற்குப் பகுதியில் ஈரான் கடற்கரைக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் பாரசீக வளைகுடாவின் நீல நீரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தீவின் பெயர் ஹார்முஸ் தீவு, இதை ரெயின்போ தீவு என்றும் அழைக்கிறார்கள்.
இதற்கு பல சுற்றுலா பயணிகளும் சென்று வருவது வழக்கம்.இந்த தீவை புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்றும் அழைக்கிறார்கள். இது தங்கக் கால்வாய்கள், வண்ணமயமான மலைகள், அழகான உப்புச் சுரங்கங்கள் எனப் பல அழகுகளால் இந்த இடம் நிறைந்துள்ளது.
இது வானவில் நிறம்போல காட்சியளிக்க காரணம் இங்கு எரிமலைக் கற்கள், கல், மண், இரும்பு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மின்னுவதாகும்.
இங்குள்ள கற்களில் சூரியக் கதிர்கள் படும்போது அவை மின்னுகின்றன. இந்த தீவில் 70க்கும் மேற்பட்ட வகையான தாதுக்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவு உருவானது.
எரிமலைக் கற்கள், தாதுக்கள், உப்பு மேடுகள் இந்த தீவை அழகாக்கியுள்ளன. இவைற்றை தவிர மிகவும் ஆச்சரியதான விடயம் இந்த மலையை மக்கள் சாப்பிடலாம்.
ஏனென்றால் இந்த மலைகள் தடிமனான உப்பு அடுக்குகளால் ஆனவை. பல்வேறு வகையான தாதுக்கள் காரணமாக இந்த தீவின் மண்ணும் காரமாக இருக்கும்.
இதை உணவில் மசாலாவாகப் பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள மக்கள் சிவப்பு மண்ணை சட்னியாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கலைஞர்கள் இங்குள்ள சிவப்பு மண்ணை ஓவியத்தில் பயன்படுத்துகிறார்கள். மக்கள் தங்கள் துணிகளுக்கு வண்ணம் தீட்ட இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |