விலைக் கொடுத்து வாங்க வேண்டாம்... இனி வீட்டிலேயே செய்யலாம் ஹார்லிக்ஸ் பவுடர்
பொதுவகாவே சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் தினமும் ஊட்டசத்துக்காக காலையில் ஹார்லிக்ஸ் குடிப்பது வழக்கம்.
இது நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு நாளையும் சுறுசுறுப்பாக மாற்றுவதற்கும் தினமும் குடிப்போம். அந்தவகையில் தினமும் ஹார்லிக்ஸ் பவுடரை கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். இந்த ஹார்லிக்ஸ் பவுடரை எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை வேர்க்கடலை -1/2 கப்
பாதாம் - 1/2 கப்
பால் பவுடர் - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
மால்ட் பவுடர் - 1 கப்
கோகோ தூள்- 3-5 தேக்கரண்டி
மால்ட் பவுடர் செய்ய பார்லி தானியங்கள்- 1 1/2 கப் மால்ட் பவுடர் வீட்டில் செய்வதற்கு பார்லியை ஊற வைத்து அது முளைக்கட்டியதும் காய வைத்து ஒவனில் வைத்து வறுத்து பவுடராக அரைத்து கொள்ளவும்.
செய்முறை
முதலில் ஒரு பேனில் பாதாம் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
பின்னர் வேர்க்கடலையின் தோலை நீக்கி கொள்ளவும் பிறகு வறுத்த வேர்க்கடலை, பாதாம், பால் பவுடரோடு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அதன்பின் அதனுடன் வெல்லம் மற்றும் மால்ட் பவுடர் சேர்த்து சல்லடையில் சலித்து எடுத்து எடுத்தால் ஹார்லிக்ஸ் பவுடர் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |