நடிகை ஹனி ரோஸிடம் தவறாக நடந்து கொண்ட கேரள தொழிலதிபர்- கைது செய்த பொலிஸார்
மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகார் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஹனி ரோஸ்
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகர் ஹனி ரோஸ்.
இவர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “திருவனந்தபுரம் லாட்ஜ்”என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் கடை திறப்பு விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் அடுத்தப்படியாக ரோஸ் நடிப்பில் ‘ரேச்சல்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
கைது செய்யப்பட்ட தொழிலதிபர்
இந்த நிலையில், ஹனி ரோஸ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, “ நகை கடை திறப்பு விழாவொன்றிற்கு சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, தொழிலதிபர் ஒருவர் நிகழ்ச்சியில் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அப்போது நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதனை தெளிவாக கூறினேன். என்னை பற்றிய கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன்.
பிறகு அவர் நிறுவன நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் செல்ல மறுத்துவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து எனது பெயரைத் பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் செயல் என்னைப் பழிவாங்குவது போல் இருக்கிறது. ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என கூறினார்.
இதனை தொடர்ந்து குறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |