காலை வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மையை தெரிஞ்சிக்கோங்க
பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டி ஆக்சிடண்ட் இருக்கின்றது. இந்த அலிசின் சத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது.
ரத்தத்தில் இருக்கும்,கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு முதல் இடம் பிடிக்கும். மேலும், அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் இது நீக்க உதவுகிறது.
உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் மற்றும் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது தேன்.
இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் அதீத பலம் பெறும். மேலும், சுறுசுறுப்பு தன்மை அதிகரிக்கும். உடல் மிகவும் அழகான தோற்றம் பெறும்.
முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை குறைக்க உதவும்.
தேனின் நன்மைகள்
இதயத்தை பலப்படுத்தும்
நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது.
இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
கல்லீரல் பாதுகாப்பு
தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேலும், கிளைகோஜன் உருவாக்கத்துக்கும் நச்சுப் பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளைத் தேன் குணப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தேன், பசியை அதிகரிக்கச் செய்யும். உடலிலுள்ள கழிவுப் பொருள்களையும் எளிதாக வெளியேற்ற உதவும். வாயுவை வெளியேற்றும் ஆற்றலும் தேனுக்கு உண்டு. அதுமட்டுமா? தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
தொற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்தாகிறது. அது அந்நோயாளிகளுக்கு இழந்த சக்தியை அளிப்பதோடு அந்நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் அளிக்கிறது.
பூண்டின் பயன்கள்
சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது.
கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது. இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை நீங்கள் பெற முடியும்.
டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.
செரிமானத்திற்கு நல்லது
காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். பூண்டு உங்க செரிமான கோளாறுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது. எனவே எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயை தடுக்கவும்
பச்சை பூண்டை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
சளி மற்றும் இருமலுக்கு தீர்வு
சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த தீர்வளிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் தண்ணீருடன் பூண்டை சேர்த்து சாப்பிடுவது சளி அபாயத்தை குறைக்க உதவும்.
இதய நோய்களை தடுக்கிறது
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுபு்புகள் சேருவதைத் தடுக்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
நீண்ட ஆயுளைத் தரும்
பூண்டு நம் உடலில் உள்ள சில முக்கியமான உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்க ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.