காலை வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா? பலரும் அறிந்திடாத உண்மை
உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களையும், தாதுக்களையும் அளிக்கும் தேனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேன்
பொதுவான தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும், மருத்துவ பலனையும் அதிகமாகவே அளிக்கின்றது.
தொண்டைவலி, இருமல் மட்டுமின்றி தீக்காயங்களை ஆற்றவும், இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவுகின்றது.
அதுமட்டுமின்றி உடல் எடையினை குறைக்கவும், அல்சர் போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணவும் செய்கின்றது.
ஆயுர்வேத மருத்துவத்திலும் தேனை அதிகமாகவே பயன்படுத்துகின்றனர்.

வெறும் வயிற்றில் தேன்
தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதுடன், அதீத பலமும் கிடைக்கும். மிக அழகான தோற்றத்தினையும் பெற முடியும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
தேநீர் அல்லது காபி பருகும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாம்.

சாப்பிட்ட பின்பு தேன் எடுத்துக் கொள்வதை விட வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.
வெறும் வயிற்றில் தேன் எடுத்துக் கொள்வது வளர்சிதை மாற்றத்தினை அதிகரிப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
மேலும் நச்சுக்களை நீக்கவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தேனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது சிறந்தது.

எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நல்லதொரு மாற்றத்தினை காண முடியும்.
முக்கியமாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |