வெதுவெதுப்பான நீரில் இந்த இரண்டு பொருள் கலந்து குடிங்க - சரசரனு எடை குறையும்
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் இரண்டு பொருட்கள் கலந்து குடித்தால் சரசரவென்று உடல் எடை குறையும்.
எடை குறைக்கும் டிப்ஸ்
பழங்காலத்திலிருந்தே, மக்கள் மத்தியில் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று இந்த உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை. மக்கள் கொழுப்புகளை உட்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி செய்யாததாலும் உடல் எடை அதிகரிக்கும்.
ஆனால் இந்த காரணங்கள் பொதுவானதே இதை தவிர பல ஏராளமான காரணங்கள் உள்ளது. இந்த எடை அதிகரிப்பால் மக்கள் நீரிழிவு, புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகலாம்.
என்னதான் சிலர் இதை கணக்கெடுக்காமல் இருந்தாலும் சிலர் இந்த எடை குறைப்பதில் அக்கறையாக இருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் சூப்பரான ஒரு டிப்ஸ் தான் இந்த பதிவில் கொடுக்கப்போகின்றோம்.
எலுமிச்சை,தேன்
காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை குடிப்பதை நிறுத்திவிட்டு இதை குடித்தால் எடை குறையும். எனவே எடை குறைக்க ஆசைப்படுபவர்கள் கட்டாயம் சுடுநீரில் தேன் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.
அந்த நீர் கொதிக்க கூடாது. கொதிக்க முன்னர் அதை அடுப்பை விட்டு இறக்கி லேசான சூடு இருக்கும் சமயத்தில் எலுமிச்சை சாறும் கொஞ்சமாக தேனும் சேர்த்து கலந்து அதை அப்படியே வெறு வயிற்றில் குடிக்க வேண்டும்.
உடலில் கெட்ட கொழுப்பு இப்படி செய்தால் கரையும் ஆனால் இதை தினமும் செய்ய கூடாது. வாரத்தில் மூன்று நாள் குடிக்க வேண்டும்.
தினமும் செய்தால் உங்கள் உடல் சக்தியை இழக்கும். உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள் இந்த டிப்ஸ் போலோ பண்ணி பாருங்க அருமையான ரிசல்ட் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |