பேரழகியாக மாற இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு முக அழகு என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்காக சிலர் கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துவார்கள். இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கரும்புள்ளிகள், பொலிவின்மை, உள்ளிட்ட சரும பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுகிறது.
அந்தவகையில் வீட்டில் இலகுவாக பெறக்கூடிய பயன்படுத்து கூடிய தேன் இவை அனைத்தையும் சரிச் செய்து, பொலிவை பெற்று தருகிறது.
ஆனால் தேனின் தன்மை பொருத்தும், சருமத்தின் தன்மை பொருத்தும் தான் தேனின் பயன்பாடு இருக்கிறது.
இந்த கூற்றின் படி தேன் பற்றிய மேலதிக விளக்கத்தையும், அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
எப்படி பயன்படுத்துறாங்க தெரியுமா?
1. முகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் தேனை எடுத்து முகத்தை கழுவி விட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்து விட்டு கழுவினால் போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு மாதத்தில் சரியாகி விடும்.
2. பொலிவின்மை, கருமை பிரச்சினையுள்ளவர்கள் தயிர் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவினால் இது போன்ற பிரச்சினைகள் குறையும்.
3. தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் உடலில் இன்சுலின் அளவு சீராகி செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்கள் நன்றாக சுரக்கும். இதனால் தூக்கமின்மை பிரச்சினையே இருக்காது.
முக்கிய குறிப்பு
ஏதாவது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் பாவிப்பதை தடுக்கவும்.