கழுத்து பகுதி ரொம்ப கருப்பாக இருக்கா?அப்போ இந்த Pack போடுங்க
பொதுவாக சரும பராமரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரிக் கொண்டே இருக்கும்.
சருமம் எண்ணெய் தன்மை கொண்டிருக்கிறது என்றால் அதற்கு சில பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போன்று வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு உள்ளது.
எனவே சருமத்தின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் சருமத்தை பராமரிக்க வேண்டும். சிலருக்கு போதுமான பராமரிப்பு இன்மை, உடலில் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் காரணமாக கழுத்து பகுதிகளில் கருப்பு இருக்கும்.
இதனை என்ன தான் முயற்சி செய்தாலும் இல்லாமலாக்க முடியாமல் கவலையாக இருப்பார்கள். கழுத்துப் பகுதி தானே கருப்பு இருக்கிறது என அலட்சியமாக விட்டு விட்டால் அது சருமத்திலும் தாக்கம் செலுத்தும்.
அந்த வகையில், கழுத்தில் இருக்கும் கருப்பை படிபடியாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்காக வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்யலாம்.
அப்படியாயின், சருமத்தில் இருக்கும் கருப்பை வேறூடன் அழிக்கும் Face pack எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- சிறிய துண்டு
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
- தயிர் ஆடை
Face pack தயாரிப்பது எப்படி?
கழுத்து பகுதியில் கருமை இருப்பவர்கள் மாஸ்க் தயாரிக்க வேண்டும்.
அதற்கு தேவையான பீட்ரூட் எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இவ்வாறு அரைத்த பீட்ரூட்டுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் ஆடை சேர்த்து கலந்து விடவும்.
இதனை கழுத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
இந்த பேக் வாரத்திற்கு இரண்டு, மூன்று தடவை போட்டால் கூட கொஞ்சம் கொஞ்சமாக கருமை மறையும்.
இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது என்பதால் எந்தவித தயக்கமும் இல்லாமல் போடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |