உதடு ரொம்ப கருப்பா இருக்கா? கவலை விடுங்க.. இதோ அசத்தலான டிப்ஸ்
பொதுவாக பெண்களுக்கு அவர்களது உதடு, சருமம் இவற்றை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
சிலருக்கு இயற்கையாகவே கருப்பாக காணப்படும், இன்னும் சிலருக்கு தவறான பழக்கங்களினாலும் முறையான பராமரிப்பு இன்மையாலும் உதடு பகுதி கருப்பாக இருக்கும்.
இவ்வாறு கருப்பாக இருக்கும் போது பீட்ரூட் கிழங்கு பயன்படுத்தி அந்த இடத்தை தேய்க்கும் போது கருமை நீங்கி சிகப்பாக மாறும் என பலர் கூறுவார்கள்.
அந்த வகையில் கருப்பாக இருக்கும் உதட்டை சிவப்பு நிறமாக மாற்ற ஒரு டிப்ஸ் தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம் - அரைவாசி பழம்
- தேன் - 2 துளி
- உப்பு - 1/2 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் தேவையான எலுமிச்சைப்பழத்தை எடுத்து அரைவாசியாக வெட்டி அதில் தேன், உப்பு கலந்து எடுத்து உதட்டில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு
அலற்சி எதுவும் ஏற்படுமாக இருந்தால் இந்த முறைமை பின்பற்றுவதை தடுக்கவும்.