இந்த காயை தடவி பாருங்க.. முகத்திலுள்ள பருக்கள் காணாமல் போகும்
சருமத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நமது மோசமான வாழ்க்கை முறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
நாளடைவில் பருக்கள் குறைந்தாலும் அது வந்து மறைந்த வடுக்கள் மறைவதற்கு கொஞ்சம் நாட்களாகும்.
இந்தக் கரும்புள்ளிகள் அவ்வளவு சீக்கிரம் மறையாது. தழும்புகள் போன்று முகத்தில் இருந்து முகத்தை அசிங்கமாக்கும். இது போன்ற தழும்புகளை கடுக்காய் பொடி சரிச் செய்கிறது என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடுக்காய் பொடியை வைத்து எப்படி பருக்கள் வந்த தழும்பை மறைக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பயன்படுத்துவது எப்படி?
- சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கடுக்காயை தேய்க்க வேண்டும்.
- இப்படி தேய்க்கும் பொழுது ஒரு பேஸ்ட் போன்று உருவாகும்.
- அதனை முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் தழும்புகள் மறையும்.
- நாட்டு மருந்துக் கடைகளில் கடுக்காய் பொடியாகவும் கிடைக்கிறது. ஆனால், கடுக்காய் காயைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில், பொடியில் ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது.
பயன்பாட்டு முறை
கடுக்காய் பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
கடுக்காயைப் பயன்படுத்துவதால் சருமம் சிறிது வறண்டு போக வாய்ப்புள்ளது. எனவே, அதைப் பயன்படுத்திய பிறகு சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் (Moisturizer) தடவுவது அவசியம்.
இது உங்களுடைய முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். கடுக்காயைப் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள பிக்மென்டேஷன் மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்து முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
அதிகளவு தண்ணீர் எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தினமும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |