homemade chocolate: நாவூரும் சுவையில் பால் சாக்லேட்: வெறும் 5 பொருள் இருந்தா போதும்
பொதுவாகவே உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு இனிப்பு பண்டம் என்றால் அது நிச்சயம் சாக்லேட் ஆகத்ததான் இருக்கும்.
சாக்லேட் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு இதன் சுவை அனைவரையும் அடிமையாக்கியுள்ளது.
சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கவே பயப்படுவார்கள்.
காரணம் கடைகளில் வாங்கும் சாக்லேட்டுக்களில் நீண்ட நாள்களுக்கு கெட்டுபோகாமல், இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ரசாயனங்களை கலக்கின்றார்கள்.இதனை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பது ஆபத்து.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட வெறும் 5 பொருட்களை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பால் சாக்லேட்டை வீட்டிலேயே எப்ப செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வெண்ணெய்
பால் பவுடர்
பொடித்த சர்க்கரை
கோகோ பவுடர்
வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை
முதலில் 3 தேக்கரண்டி பொடித்த சர்க்கரை, 2 தேக்கரண்டி கோகோ தூள் மற்றும் 1 தேக்கரண்டி பால் பவுடர் ஆகியவற்றை ஒரு சல்லடையில் சேர்த்து அதனை நன்றாக சலித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன் மேல் ஒரு கிண்ணத்தை வைக்கவும்.
கிண்ணம் உலர்ந்திருப்பதையும், கிண்ணத்தின் அடிப்பகுதி கொதிக்கும் நீரைத் தொடக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கிண்ணத்தில் ¼ கப் வெண்ணெய் சேர்த்து,முழுமையாக உருகும் வரை நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
பின்னர் சலிக்கப்பட்ட பொருட்களைச் சேர்த்து 2 பாகங்களாக சேர்க்கவும். முதலில் மீதமுள்ளவற்றைச் சேர்த்து, பின்னர் நன்றாகக் கிளறவும். கலவை கட்டிகள் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்.
அதனையடுத்து ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, விரைவாக கிளறிவிட்டு அடுப்பை அணைத்து உடனடியாக அச்சுக்குள் ஊற்றி, சில முறை தட்ட வேண்டும்.
பின்னர் ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் சாக்லேட் அச்சு நீக்க தயாராக இருக்கும். அவ்வளவு தான் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வீட்டு தயாரிப்பு சாக்லேட் தாயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |