நரைமுடிக்கு Good Bye சொல்ல வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு பொருளை மட்டும் சேருங்க
நரைமுடிக்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு தேங்காய் எண்ணெய்யுடன் எந்த பொருளை சேர்த்து எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நரைமுடி பிரச்சினை
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கு பிரச்சினையாக நரைமுடி பிரச்சினை உள்ளது. அதிலும் இளம் வயதினரும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.
வயதானவர்களுக்கே நரைமுடி என்றால் சற்று கலக்கம் ஏற்படும். அவ்வாறு இருக்கையில் இளம்வயதினர் நரைமுடி பிரச்சினை ஏற்பட்டால் மனநிலை மிகவும் சோகமாக மாறிவிடும்.
இளநரை மறைவதற்கு தேங்காய் எண்ணெய்யுடன் ஒரே ஒரு பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்தினால் போதுமாம்.
ஆம் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வேம்பாளம் பட்டையை பயன்படுத்தி வந்தால், தலைமுடி கருமையாக வளருமாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி லிட்டர்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மருதாணி இலை - ஒரு கைப்பிடி
வேம்பாளம் பட்டை - 50 கிராம்
எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது?
வெந்தயம், கருஞ்சீரகம், மருதாணி இலைகளை மிக்சியில் அரைத்து பொடி செய்யவும். பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றினை வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொடியை செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யுடன் நன்றாக கலக்க வேண்டும். மேலும் இதனுடன் 50 கிராம் வேம்பாளம் பட்டியையும் சேர்க்கவும்.
பின்பு இந்த கலவையை டபுள் பாயில் முறைப்படி எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். அதாவது, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர், இந்த கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் இருக்கும் பாத்திரத்தை வைத்து சுமார் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக இந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் இதை வடிகட்டி பயன்படுத்தலாம். மேலும், இதே பொருட்களுடன் மீண்டும் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனையும் வடிகட்டி பயன்படுத்தலாம். அவ்வாறு 3 மாதங்கள் வரை இந்த பொருட்களை பயன்படுத்த முடியும்.
இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால், தலை முடி கருமையாக வளரும். ஏற்கனவே இருக்கும் நரை முடிகள் மறையத் தொடங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |