குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்பதில் சிக்கலா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்..
குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று முடியை உயிரற்றதாக மாற்றி விடுகிறது.
இதன் விளைவாக பருவத்தில் இருக்கும் தலைமுடிகள் கூட வறட்சியடைந்து காணப்படும். அத்துடன் பொடுகு பிரச்சனையையும் ஏற்படும்.
மாறிவரும் காலநிலை காரணமாக பலருக்கு முடி உதிரத் தொடங்கும். கூந்தலில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சரியான ஊட்டச்சத்தை கொடுப்பது அவசியமாகும்.
கூந்தல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மட்டுமின்றி, பட்டு போன்று மென்மையாகவும் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் செய்யக்கூடிய சில மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், குளிர்காலத்தில் தலைமுடியை செழிப்பாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தலைக்கு சிறந்த மருத்துவம் செய்வதற்கு தயிர், தேன், ஆலிவ் எண்ணெய், முட்டை, வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் மற்றும் அலோ வேரா ஆகிய பொருட்கள் இருந்தால் போதுமானது.
தலைமுடிக்கு சிறந்த மருத்துவம்
1. இதன்படி, தயிர், தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு போடலாம். இது தலைக்கு ப்ரோடீன் மற்றும் லாக்டிக் ஆசிட் ஆனது முடியை ஹைட்ரேட் செய்கிறது. இது தவிர, தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் முடிக்கு ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. வறட்சியாக உள்ளது என கவலையில் இருப்பவர்கள் இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
2. முட்டை மற்றும் தேன் கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் குவியும். ஏனெனின் முட்டையில் இருக்கும் ஊட்டசத்துக்கள் தலைமுடி ஆரோக்கியம் தருகின்றது. தலைக்கு தடவி சரியாக 30 நிமிடம் கழித்து கழுவினால் தலைமுடி பட்டு போன்று மென்மையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |