இந்த பழம் சாப்பிடுங்க.. தலைமுடி இடுப்பு வரை வளரும்: எப்படி தெரியுமா?
பொதுவாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக தலைமுடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல் போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.
தலைமுடி பராமரிப்பதற்கு ஒரு சில எண்ணெய்கள் கடைகளில் விற்பனை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்தும் பொழுது நாளடைவில் அதிலுள்ள ரசாயனங்கள் வேறு விதமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாக வீட்டு வைத்தியம் உள்ளது. வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எண்ணெய், மாஸ்க் போடலாம். அதே போன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும். உடலில் உள்ள சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு அவசியமாகும்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
கிவி பழம் தலைமுடி வளருமா?
ஆம், மற்ற பழங்களை விட கிவி பழத்தில் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அதிகமாக உள்ளது. கிவி, பெர்ரி ஆகிய பழங்களில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை தலைமுடிக்கு ஊட்டம் கொடுத்து வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
புத்துணர்ச்சியூட்டும் கோடைக்கால பழமாக பார்க்கப்படும் கிவி தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படும் என பலருக்கும் தெரியாது. கிவி பழத்திருள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இது முடி இழைகளின் வலிமை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. உடைவதைத் தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கூடுதலாக, வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களால் ஏற்படும் சேதத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் தோல் மருத்துவர் ஒருவரால் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பிரிங்கர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கிவி அதிக வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளடக்கம் கொண்டுள்ளதால் உச்சந்தலையின் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் தலைமுடி உதிர்வு குறையும். இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கிவி பழத்தில் உள்ளது.
இவையே தலைமுடிக்கு அதிகமான ஊக்கம் கொடுக்கிறது. கிவி தாமிரத்தின் நல்ல மூலமாகும், இது மெலனின் உற்பத்திக்கு அவசியம். இதுவே தலைக்கு நிறமியாக செயற்பட்டு கருப்பு நிறத்தை கொடுக்கிறது. கிவியில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இது தலைமுடியில் இருக்கும் வறட்சி, உதிர்தல் மற்றும் பிளவு முனைகளை குறைக்கிறது. கிவி பழத்தில் இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் பொடுகு பிரச்சினையும் உடனடியாக தீர்வுக்கு வரும். ஏனெனின் பொடுகு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று துத்தநாகக் குறைபாடும் காரணம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |