மாதவிடாய் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் இருக்கா என்ன செய்யலாம்!
மாதவிடாய் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்ளும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிசிஓஎஸ் என்று சொல்லகூடிய இந்த பிரச்சனைக்கு காரணங்கள் பல உண்டு. மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் அதனுடன் வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம். பக்க விளைவில்லாத பாதுகாப்பான வகையில் சில வகையான உணவுபொருள்களை சேர்த்துகொள்வதன் மூலம் இந்த அறிகுறிகளிலிருந்து விடுபட முடியும். பெண்களின் இனப்பெருக்க அமைப்பு முழுமையாக செயல்பட வைட்டமின் டி அவசியம்.
கருப்பை செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கிறது. பிசிஓஎஸ் குறைபாடு கொண்டிருக்கும் பெண்களுக்கு 65 முதல் 85% வரை வைட்டமின் டி குறைபாடு உள்ளது. வைட்டமின் சீரம் அளவு குறைவாக இருந்தால் வைட்டமின் டி சப்ளிமெண்ட் பரிந்துரைக்கப்படுவார்கள். இதை தொடர்ந்து நீங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் சுத்தமான தேங்காயெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மிருதுவாக்கிகளில் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தேங்கயெண்ணெயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மற்றூம் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவையும் இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தவும் செய்கின்றன.
மேலும் இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மஞ்சள் மஞ்சளில் குர்குமின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இந்த கலவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த செய்கிறது. இது குறித்த ஆய்வுகள் எலி மீது மேற்கொண்ட போது அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்பட்டது கண்டறியப்பட்டது. இது பிசிஓஎஸ் அறிகுறிகளை குறைக்க உதவும். தேங்காய்ப்பால் - ஒன்றரை கப் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்ப்பாலை மிதமான சூட்டில் சூடாக்கி அதை குளிர்விக்கவும்.
பிறகு இந்த தேங்காய்ப்பாலில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். தினமும் இரண்டு முறையாவது குடிக்கலாம். மஞ்சள் சிலருக்கு குமட்டல் மற்றும் அஜீரணத்தை உண்டாக்கும். இது அரிதாக வயிற்றுப்போக்கை உண்டாக்கும். நீரிழிவு மருந்துகளுடன் எடுத்துகொள்பவர்கள் இதை அதிகமாக எடுக்க வேண்டாம். க்ரீன் டீ க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் கேடசின்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது கருப்பை நீர்க்கட்டிகள் மற்றூம் அது தொடர்புடைய அறிகுறிகளை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவை குறைக்க உதவும்.
இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. தினசரி க்ரீன் டீ குடிப்பது பிசிஓ எஸ்ஸில் பொதுவாக காணப்படும் எடை அதிகரிப்பு பாதிபை குறைக்க செய்யலாம். ஒரு கப் வெந்நீரில் க்ரீன் டீ பேக் கலந்து சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் இரண்டு கப் வீதம் குடித்து வரலாம். கற்றாழை சாறு கற்றாழை சாறுவில் இருக்கும் கூறூகள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க செய்யும்.
எலிகள் மீது மேற்கொண்ட ஆய்வில் கருப்பை ஸ்டீராய்டு நிலையை மீட்டெடுக்க செய்கிறது. கருப்பை செயல்பாட்டை சாதகமாக்குகிறது. மேலும் இது பிசிஓஎஸ் அறிகுறீகளை போக்க உதவுகிறது.
பிசிஓஎஸ் பிரச்சனை இருப்பவர்கள் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்து கொள்வதுடன் இந்த முறைகளை பின்பற்றினால் பெருமளவு குணமாகும். எனினும் இந்த சிகிச்சையை பின்பற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.