இந்த தண்ணீர் ஒரு கப் குடிங்க.. தொண்டை கரகரப்பு நீங்கும்
தொண்டை கரகரப்பு என்பது தொண்டையில் ஏற்படும் ஒருவித அசௌகரியம் அல்லது குரலில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. இந்த பிரச்சினை குரல்வளை அல்லது குரல் நாண்களில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால் வருகிறது.
வழக்கமாக காலநிலை மாற்றத்தின்போது வரும் தொண்டை கரகரப்பு சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளால் வருகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா தொற்றுகள், ஒவ்வாமை, புகைபிடித்தல் போன்றவை காரணங்களாலும் ஏற்படும்.
எப்படி வந்தாலும், தொண்டையில் கரகரப்பு பிரச்சினையிருந்தால் நிம்மதியாகவே இருக்க முடியாது. அதனை எப்படியாவது சரிச் செய்து விட வேண்டும் என நினைப்போம்.
அந்த வகையில், தொண்டையில் கரகரப்பு பிரச்சினையுள்ளவர்கள் மூலிகை சிலவற்றை போட்டு டீ குடித்தால் தொண்டை கரகரப்பு பிரச்சினை மருந்து குடிக்காமல் சரியாகி விடும்.
அப்படியாயின், தொண்டை கரகரப்பை குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
தொண்டை கரகரப்பை போக்கும் பாட்டி வைத்தியங்கள்
1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கவும் இப்படி செய்தால் தொண்டையில் இருக்கும் வீக்கம் குறையும். தொண்டை கரகரப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.
2. தேன் கலந்த மூலிகை டீ இல்லாவிட்டால் தேன், எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். இது தொண்டையில் புண் இருந்தால் அதனை ஆற்றி, தொண்டை கரகரப்பை குறைக்கும்.
3. சிறிதளவு இஞ்சி எடுத்து அதனை பொடித்து, நீரில் போட்டு கொதிக்க விட்டு குடிக்கலாம். இது தொண்டையில் உள்ள புண் மற்றும் எரிச்சலை குறைக்கும்.
4. துளசி இலைகள் வீட்டில் இருந்தால் அதனை கொதிக்கும் நீரில் போட்டு, அல்லது துளசி இலையை மென்றும் சாப்பிடலாம். இது தொண்டை வலியை போக்கும்.
5. கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்ற மருத்துவ பலன்கள் அதிகமாக இருக்கும் பொருட்களை போட்டு டீ தயாரித்து குடிக்கலாம். இது தொண்டையில் இருக்கும் கரகரப்பை குறைக்கும்.
6. சூடான நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவி பிடிக்கவும். இது தொண்டையில் உள்ள சளியை கரைக்கும். அத்துடன் தொண்டையில் இருக்கும் வலி குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
