வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா இருக்கா? மூன்றே நாட்களில் நிரந்தர தீர்வு
வாயுத் தொல்லை இருந்தாலே தர்மசங்கடமாகிவிடும், எதையும் நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாமல் கஷ்டப்பட நேரிடும்.
இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் தற்காலிகமாக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தரம் என்று சொல்ல முடியாது.
எனவே எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதனை எப்படி சரிசெய்யலாம் என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிறிய துண்டு இஞ்சி.
10 அல்லது 12 துளசி இலைகள்
செய்முறை
இஞ்சியை மேலும் சிறிய துண்டுகளாக வெட்டி துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து வந்த கலவைக்கு 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து வரும் சாற்றை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலை, மாலை இரண்டு நேரம் என மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்துவ வர, வாயுத்தொல்லை இல்லாமல் போய்விடும்.
இதேபோன்று உங்கள் உணவுப்பழக்க வழக்கத்தையும் சற்று மாற்றி அமைத்துக்கொண்டால் இன்னும் சிறந்த பலனை பெறலாம்.