வறட்டு இருமலால் அதிக அவஸ்தையா? அற்புத மூலிகை வைத்தியம்
பருவநிலை மாற்றத்தின் போது உருவாகும் உடல் தொந்தரவுகளில் இருமலும் ஒன்றாகும். இரண்டு வகையான இருமல் ஏற்படுகின்றது.
நுரையீரலில் சளி அதிகமானால் ஏற்படும் இருமல் மற்றும் வறட்டு இருமல் ஏற்படுகின்றது. இதில் வறட்டு இருமலை போக்குவதற்கு அலோபதி மருந்துகளை நாம் எடுத்துக்கொண்டாலும் அவை சரியான தீர்வை கொடுப்பதில்லை.
இதனால் சித்த மற்றும் நாட்டு வைத்தியதினை வறட்டு இருமலுக்கு மேற்கொள்ளலாம். அதிலும் இருமல் ஆரம்பமாகும் போதே மருத்துவத்தினை தொடங்கிவிடவும்.
வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்
அதிமுதர வேரை சிறு துண்டுகளாக எடுத்து வாயில் போட்டு அதன் சாறை உமிழ்நீரோடு விழுங்கினால் வறட்டு இருமல் குணமாகும். அல்லது அதிமதுர பொடியினை சுடுதண்ணீரில் கலந்து கொடுத்து இரவில் குடித்துவந்தாலும் வறட்டு இருமலுக்கு தீர்வு அளிக்கலாம்.
சீரகத்தினை நீரில் போட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு போட்டு குடித்தால் இருமல் சரியாகும்.
மஞ்சள் மற்றும் தேனை பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.. இதே போன்று மஞ்சள் கலந்து ஆவி பிடித்தாலும் நல்ல பலனைக் காணலாம்.
சித்தரத்தை வறட்டு இருமலுக்கு நிரந்தர தீர்வு கொடுகின்றது.
எலுமிச்சையை இஞ்சியுட கலந்து கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் தொண்டை எரிச்சல் மற்றும் வலிக்கு நிவாரணம் கொடுக்கின்றது.
கருப்பு மிளகை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.