ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பல்லை இழந்துவிட்டால் சிறிய வயதினரை கூட வயதானவர்கள் போல் காட்டும். பற்சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.
பற்களை பொருத்தவரையில் தற்காலத்தில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சினையாக ஈருகளில் ரத்தக் கசிவு காணப்படுகின்றது. இவ்வாறான ரத்தக் கசிவை அலட்சியப்படுத்தக்கூடாது.
அதனை சாராரணமாக எடுத்துக்கொண்டு உரிய சிகிச்சை பெறாத பட்சத்தில் பல்லை இழக்கும் அபாயம் ஏற்படும். ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்தும் இதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதான காரணங்கள்
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, ஈறுகளின் ரத்த ஓட்டத்தில் உள்ள பிராண வாயு குறைந்து காணப்படும். இதனால், ஈறுகளில் ஏற்படும் காயங்கள் தானே ஆறும் தன்மை குறைந்து, ரத்தக் கசிவு ஏற்பட வழிவகுக்கும்.
இது தவிர வைட்டமின் C மற்றும் k குறைபாடு, ஈறுகளில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, போன்ற காரணங்களினாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். மேலும் ஹார்மோன்கள் சுரப்பு மாறுபாடு காரணமாக, கர்ப்பிணிக்கு ஈறுகள் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படலாம்.
வீட்டு வைத்தியம்
ஈறுகளில் ஏற்படும் ரத்தப் போக்கை சரி செய்வதற்கு மிக எளிதான மற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் என்னவென்றால் அது உப்பு தண்ணீரில் உ ங்கள் வாயை கொப்பளிப்பது தான். வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் வாயை கொப்பளிப்பது சிறந்த தீர்வை கொடுக்கும்.
ஈறுகளில் இரத்தப்போக்கை நிறுத்துவதில் வேப்ப எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூங்கும் முன் ஈறுகளில் தடவி காலையில் கழுவி விடலாம்.
கராம்பு எண்ணெய் பயன்படுத்துவதும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுப்பதில் துணைப்புரிகின்றது. தினசரி பாவிக்கும் டூத் பேஸ்டில் கராம்பு ஒரு மூலப்பொளாக இருப்பதும் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். கற்றாழை சாறு ஈறுகளில் ரத்தப்போக்கு நிறுத்த உதவுகிறது.
கற்றாழை இலைகளை வெட்டி அதிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றை ஈறுகளில் தடவி லேசாக மசாஜ் செய்து வர ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுக்கு தீர்வு கிடைப்பதுடன் வாய் ஆரோக்கியத்திற்கும் இது பயன் தருவதாக அமையும்.
வாய் சுகாரத்தை முறையாக பின்பற்றுவதும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
தினசரி இரண்டு முறை பல் துலக்குவது மற்றும் மவுத் வாஷ் பயன்படுத்துவது போன்ற சுகாதார பழக்கங்களை கடைப்பிடித்தல் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |