உங்களை அறியாமல் வரும் காது வலியை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம்
பொதுவாக சிலருக்கும் திடீரென காதுகளில் வலி ஏற்படும். இது காலநிலை மாற்றத்தினாலும், தலையில் சளி அடைத்திருப்பதாலும் ஏற்படுகின்றன.
அந்த வகையில் சில நேரங்களில் மந்தமான வலியையும், மற்ற நேரங்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற வலியையும் ஏற்படலாம்.
காது வலி ஒரு கட்டத்திற்கு மேல் செல்லுகின்ற போது அது தாடை, பற்கள் என கீழுள்ள பகுதியிலும் ஒரு வகை வலியை ஏற்படுத்தும்.
இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தும் காது வலியை எப்படி போக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
காதுகளில் வலி ஏற்பட காரணங்கள்
- தொண்டை வலி
- சைனஸ் தொற்று
- பல் தொற்று
- குறுகிய கால அல்லது நீண்ட கால காது தொற்று
- தாடையின் கீல்வாதம்
- ஜாயிண்ட் சிண்ட்ரோம்
- காதில் காயம் மெழுகு அல்லது சில பொருள் காதில் மாட்டிகொள்வது
- நீச்சல் காது (காதுகால்வாயின் தொற்று)
- மண்டை ஓட்டின் எலும்புகளில் தொற்று மற்றும் சேதம்
வீட்டு வைத்தியம்
1. ஒரு துண்டு காட்டன் துணியை எடுத்து அதனை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நீரை பிழிந்து துணியை கையடக்கமாக மடித்து காதுகளுக்கு எதிரான அழுத்தத்தை கொடுத்து ஒற்றி எடுக்கவும். இப்படி 15 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும்.
2. காதுவலி ஏற்படும் போது நீராவி பிடிக்க வேண்டும். இந்த செயற்பாட்டின் போது நீராவி மெதுவாக மூக்கினுள் செல்லும். சில நிமிடங்கள் தொடர்ந்து செல்லும் போது காதுகளில் ஏற்படும் வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
3. நீச்சலடித்த பின்னர் காதுகளில் வலி ஏற்படுகின்றதா,? இது போன்ற நேரங்களில் காதுக்கு அருகில் குறைந்த வெப்பத்தில் ப்ளோ- ட்ரையரை காட்டி ஈரப்பதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் போது காதுகளில் ஏற்படும் குறைவடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |