இழந்த சிகப்பழகை 30 நிமிடங்களில் பெற வேண்டுமா? புதிய ப்ளீச்சிங் முறை
பொதுவாக பெண்களுக்கு முக அழகு என்பது முக்கியமான ஒன்று.
இதனை 16 தொடக்கம் 35 வரையிலான வயதில் இருக்கும் பெண்கள் அக்கறை காட்டுவார்கள்.
மேலும் முக அழகை பேணுவதற்கு தொழிநுட்ப சாதனங்கள் மற்றும் தொழிநுட்பத்தினால் இரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் கிரீம்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து இது போன்ற இரசாயன கவலைகளாலும், முறையாக முகத்தை பராமரிக்காததாலும் முகம் பொலிவிழந்து கருமையடைகின்றன.
இதனை அழகுப்படுத்தும் நிலையங்களில் சிகிச்சைப் பெறுவதை விட வீட்டிலுள்ள சமைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் மாஸ்க்களை உபயோகிப்பதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதோடு முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.
அந்த வகையில் கருமையை போக்கும் பேஸ் மாஸ்க் எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
புளி - தேவையானளவு
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1,1/2 மேசைக்கரண்டி
தேன்- 1/4 மேசைக்கரண்டி
image - Pigmentation can be caused by a various reasons.
தயாரிப்பு முறை
முதலில் சிறிய பவுலில் வெந்நிர் 1 கப் அளவு ஊற்றி, அதில் நன்றாக புளியை கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உபயோகிக்கும் முறை முகத்தை நன்றாக கழுவ வேண்டும் புளிக்கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
5 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் மெல்லிய டவலால் முகத்திலிருக்கும் நீரை ஒற்றி எடுப்பது சிறந்தது.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு தடவை செய்ய வேண்டும். இந்த கலவை முகத்திலுள்ள கருமையை இல்லாமாக்கி முகத்தை எந்தவிதமான இரசாயங்களுமின்றி ப்ளீச்சிங் செய்கிறது.
முக்கிய குறிப்பு - எதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக செய்முறை நிறுத்த வேண்டும்.