அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் வீட்டு வைத்தியம்
பொதுவாகவே நம்மில் பலரும் தினசரி எதிர்நோக்கும் உடற்பிரச்சினைகளுள் ஒன்று தான் அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை. இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோய் நிலைமை.
இந்த பிரச்சினைக்கு பலரும் உடன் தீர்வு வழங்கக்கூடிய மருந்துக்களை பாவிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஆனால் அவை உடல் நலத்துக்கு பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே எப்போதும் இயற்கை முறையில் தீர்வை தேடுவதே சிறந்ததாக இருக்கும்.
அசிடிட்டி ஏற்படும் போது நெஞ்சு எரிச்சல், வயிற்றில் எரிச்சல் அல்லது புளித்த ஏப்பம் போன்றன அசௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.
இதற்கு இயற்கை முறையில் உடன் தீர்வு வழங்கக் கூழய உணவு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அசிடிட்டி பிரச்சனையை தீர்க...
எப்போதுமே செரிமான பிரச்சினைகளை சீர் செய்வதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினசரி சீரக தண்ணீர் அருந்துவது அசிடிட்டி பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
அடிக்கடி இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்வதும் அசிடிட்டி பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
இஞ்சி அமில தன்மையை சமநிலைப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது, தினசரி இதனை பயன்படுத்துவதன் மூலம் அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.
அசிடிட்டி பிரச்சனையை தீர்க்க கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு மெல்வதால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் தூண்டப்பட்டு நெஞ்செரிச்சலுக்கு தீர்வு கிடைக்கின்றது. மேலும் இது செரிமான கோளாறுகளையும் சீர் செய்கின்றது.
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை போக்குவதில் மோர் பெரிதும் உதவிப்புரிகின்றது. ப்ரோபயோடிக் தன்மையை கொண்ட மோருடன் சீரக பொடியை கலந்து குடிப்பதன் மூலம் அசிடிட்டிக்கு உடனடி தீர்வு கொடுக்கும்.
நன்றாக காய்ச்சி ஆற வைக்கப்பட்ட பசும்பால் அல்லது குளிர்ந்த பால் அசிடிட்டி பிரச்சனையை தீர்க்க சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |